பெய்ஜிங்: நிலவுக்கு மீண்டும் 2024-இல் ‘சாங்ஏ-6’ என்ற விண்கலத்தை அனுப்பவிருக்கும் சீனா, அதனுடன் பாகிஸ்தானின் சிறிய செயற்கைக்கோள் ஒன்றையும் எடுத்துச் செல்லவிருக்கிறது.
நிலவில் தொலைதூரப் பகுதியிலிருந்து மண், கல் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வருவதற்கான இந்த ஆய்வுத் திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் மட்டுமின்றி பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றின் ஆய்வுக் கருவிகளையும் சீனா அனுப்பவிருக்கிறது.