உலகம்

முடங்கும் அபாயத்திலிருந்து தப்பியது அமெரிக்க அரசு

2nd Oct 2023 11:45 AM

ADVERTISEMENT


அமெரிக்க அரசு, நிதியில்லாமல் அக்டோபர் 1ஆம் தேதி, முடங்கும் அபாயத்திலிருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்ததால், அந்த அபாயத்திலிருந்து தப்பியிருக்கிறது.

அமெரிக்காவில் அரசுப் பணிகளுக்கான செலவினங்கள், ஊரியர்களுக்கான ஊதியங்கள் உள்ளிட்டவற்றிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலும் அவசியம். இரு அவைகளின் ஒப்புதல் பெற்ற மசோதாவில் அதிபர் கையெழுத்திட்டதும், அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதையும் படிக்க.. சாலை என பொய் சொன்ன ஜிபிஎஸ்: ஆற்றில் மூழ்கி பலியான மருத்துவர்கள்

அதன்படி, கடைசி நிதி ஒதுக்கீட்டு மசோதாவில் ஒதுக்கப்பட்ட நிதியானது காலியானதால், அக்டோபர் 1ஆம் தேதி அரசிடம் போதுமான நிதியில்லாமல் முடங்கும் நிலை ஏற்பட்டது. முன்னதாக, நவம்பர் மாதம் இறுதி வரையிலான காலக்கட்டத்துக்கு நிதி ஒதுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஆளும் ஜனநாயகக் கட்சியினர் அதிகம் உள்ள செனட் அவையில் நிறைவேற்றப்பட்டாலும், எதிர்க்கட்சியினர் கை ஓங்கியிருக்கும் பிரதிநிதிகள் அவையில் மசோதா நிறைவேறவில்லை.

ADVERTISEMENT

உக்ரைன் போருக்கு நிதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு செலவினங்களைக் குறைத்தால்தான் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தி மசோதாவை தோல்வியடையச் செய்தனர்.

இதனால், அமெரிக்க அரசு நிதியில்லாமல், அக்டோபர் 1ஆம் தேதி முடங்கும் அபாயம் ஏற்பட்டது. சனிக்கிழமை வரை நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அரசு முடங்க மணி நேரங்களே பாக்கி இருந்தது.

இதற்கிடையே, சனிக்கிழமை நள்ளிரவில், உக்ரைன் போருக்கு நிதி உதவியை கைவிடுவது என்று தெரிவிக்கப்பட்டு, நவம்பர் மாதம் 17ஆம் தேதி வரை அரசு செலவினங்களுக்கு நிதி ஒதுக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு குடியரசுக் கட்சியினர் அதிகம் உள்ள பிரதிநிதிகள் அவையிலும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசு முடங்கும் அபாயம் தற்காலிகமாக நீங்கியிருக்கிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT