உலகம்

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2nd Oct 2023 04:22 PM

ADVERTISEMENT

 

கரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த 2 மருத்துவர்கள், இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகிய மருத்துவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
 

 

ADVERTISEMENT

இது குறித்து நோபல் பரிசு தேர்வுக்குழு கூறியிருப்பதாவது, 2023 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மிகவும் வெற்றிகரமான இரண்டு எம்ஆர்என்ஏ அடிப்படையிலான கரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தின. அதன் மூலம், உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டனர்.

இதையும் படிக்க.. சாலை என பொய் சொன்ன ஜிபிஎஸ்: ஆற்றில் மூழ்கி பலியான மருத்துவர்கள்

மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன்,  அடிப்படை மூலக்கூறு மாற்றியமைக்கப்பட்ட எம்ஆர்என்ஏ, எதிர்வினைகளை செயல்படுத்துவதைத் தடுக்கவும் மற்றும் செல்களுக்கு எம்ஆர்ஏன்ஏ வழங்கப்படும் போது புரத உற்பத்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது என்பதைக் கண்டறிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மருத்துவப் பரிசு பெற்ற கடாலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோர் தங்கள் முடிவுகளை 2005 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் வெளியிட்டிருந்தனர். ஆனால் அது அந்த நேரத்தில் அதிக கவனம் பெறவில்லை. ஆனால் கரோனா தொற்றுநோய்களின் போது மனிதகுலத்த்தைக் காப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது.

இதன்மூலம்தான், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கரோனா தொற்றுநோய்க்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

எனவே மருத்துவத் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படவிருக்கிறது.

நடப்பாண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமையும், வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசு புதன்கிழமையும், இலக்கியத்துக்கான் நோபல் வியாழக்கிழமையும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும்  அறிவிக்கப்படவிருக்கின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT