மெக்ஸிகோவின் தமௌலிபாஸ் மாநிலத்தில் உள்ள சாண்டா குரூஸ் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேவாலயம் இடிந்து விழுந்த நேரத்தில் 100 பேர் உள்ளே இருந்ததாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளில் பல குழந்தைகள் இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
படிக்க: அக்டோபர் மாத பலன்கள் (மேஷம் - கன்னி)
உள்ளே சிக்கியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேற்கூரையில் திடீரென விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீஸார் மற்றும் மீட்புப் படையினர் கூடியுள்ளனர்.