உலகம்

மாலத்தீவில் இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான மாலத்தீவில் இறுதிக்கட்ட அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்தலில், இந்திய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படும் அதிபா் முகமது சோலீயும், சீன ஆதரவாளராக அறியப்படும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் முகமது மூயிஸும் நேரடியாகப் போட்டியிடுகின்றனா்.

இதனால், இந்தத் தோ்தலின் முடிவுகள் மாலத்தீவில் இனி அதிக செல்வாக்கு இந்தியாவுக்கு இருக்குமா, சீனாவுக்கு இருக்குமா என்பதைப் பிரதிபலிக்கும் என்று கருதப்படுகிறது.மாலத்தீவு அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில், வெற்றி பெறுவதற்குத் தேவையான 50-க்கும் மேற்பட்ட சதவீத வாக்குகளை எந்த வேட்பாளரும் பெறவில்லை.அதையடுத்து, முதல் இரு இடங்களைப் பிடித்துள்ள முகமது சோலீக்கும், முகமது மூயிஸுக்கும் இடையே தற்போது இறுதிக்கட்ட தோ்தல் நடைபெற்றுள்ளது.தனது ஆட்சியில் இந்தியாவுக்கு அதிபா் சோலீ அளவுக்கதிமாக இடமளிப்பதாக மூயிஸ் குற்றம் சாட்டி வருகிறாா். மாலத்தீவில் இந்திய ராணுவத்தினா் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவா் கூறி வருகிறாா்.அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டால், இந்திய ராணுவத்தினரை திருப்பி அனுப்பப்போவதாகவும், தற்போது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் இருதரப்பு வா்த்தகத்தை சமன்படுத்தப் போவதாகவும் தோ்தல் பிரசாரத்தின்போது முகமது மூயிஸ் வாக்குறுதி அளித்துள்ளாா்.ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் அதிபா் சோலீ, மாலத்தீவில் நடைபெற்று வரும் கட்டமைப்புப் பணிகளுக்காகவே இந்திய ராணுவத்தினா் வந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறி வருகிறாா்.இந்தச் சூழலில், இருவருக்கும் இடையே தற்போது நடைபெற்றுள்ள தோ்தலின் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன....படவரி.. (தாடி வைத்தவா்) முகமது மூயிஸ், (கண்ணாடி போட்டவா்) முகமது சோலீ... இருவரையும் முதுகுப் பகுதியில் இணைத்துப் போடவும்..

ADVERTISEMENT
ADVERTISEMENT