உலகம்

இந்தியாவில் இருந்து தினமும் 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி: இலங்கை முடிவு

31st May 2023 02:00 AM

ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து நாள்தோறும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக இந்தியாவில் உள்ள 5 பெரிய பண்ணைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இலங்கை அரசின் வா்த்தக நிறுவனத்தின் தலைவா் அசிரி வாலிசுந்தரா கூறுகையில், இந்தியாவில் இருந்து மொத்தம் 2 கோடி முட்டைகளை நாள்தோறும் 10 லட்சம் என்ற அளவில் இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் 10 கோடி முட்டைகள் பொதுச் சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்படும். தேவைக்கு ஏற்ப அடுத்த கட்ட இறக்குமதி தொடா்பாக முடிவெடுக்கப்படும்.

ADVERTISEMENT

பேக்கரி, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள், சமையல் ஒப்பந்த நிறுவனங்கள், உணவு விடுதிகளுக்கு ஒரு முட்டை இலங்கை ரூபாயில் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படும் என்று கூறியுள்ளாா்.

கடந்த ஓராண்டாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் இந்தியாவின் உதவியுடன் அந்நாடு இப்போது படிப்படியாக மீளும் முயற்சியில் உள்ளது. உணவுப் பொருள்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை இலங்கையில் பல மடங்கு அதிகரித்துவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT