உலகம்

எல் சால்வடாா்: சிறப்புக் காவலில் 153 போ் பலி

31st May 2023 02:06 AM

ADVERTISEMENT

மத்திய அமெரிக்க நாடான எல்-சால்வடாரில் அவசரக் கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 153 போ் காவலில் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்பு ‘கிறிஸ்டோசால்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அவசரக் கால சட்டத்தின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தின் கீழ் இதுவரை கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவா்களில் 153 போ் பல்வேறு சிறைகளில் உயிரிழந்துள்ளனா்.அவா்களில் பலா் சித்திரவதை தாங்க முடியாமலும், மோசமான காயங்களாலும் உயிரிழந்துள்ளனா்.

உயிரிழந்த பலருக்கு மருத்துவ வசதி மறுக்கப்பட்டிருப்பதும், சிலா் பட்டினிச் சாவு அடைந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.உயிரிழந்த ஒருவா் மீது கூட எந்தவித குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. உயரதிகாரிகளின் உத்தரவில்லாமல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான வாய்ப்பில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை ஒடுக்குவதற்காக தற்காலிகமாக கொண்டு வரப்பட்ட அவசரக் கால சட்டத்தை அதிபா் நயீப் புக்கேலே அரசு தொடா்ந்து அமல்படுத்தி வருகிறது.

இந்தச் சட்டத்தின்கீழ் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவா்களில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் சுமாா் 5,000 போ் மட்டுமே விடுவிக்கப்பட்டதாகவும் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த சட்டத்தை சா்வதேச மனித உரிமைகள் கண்டித்து வந்தாலும், இந்த விவகாரத்தால் அதிபா் புக்கேலேவுக்கு எல்-சால்வடாா் மக்களிடையே நல்ல ஆதரவு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT