உலகம்

ஜூனில் உளவு செயற்கைக்கோள்: வட கொரியா

31st May 2023 03:32 AM

ADVERTISEMENT

தாங்கள் உருவாக்கியுள்ள உளவு செயற்கைக்கோளை முதல்முறையாக வரும் ஜூன் மாதத்தில் விண்ணில் செலுத்தவுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.
 இது குறித்து அந்த நாடு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 வரும் ஜூன் மாதத்தில் எங்களது உளவு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். அதன் பிறகு, அமெரிக்காவும், தென் கொரியாவும் அவ்வப்போது நடத்தி வரும் கண்மூடித்தனமான கூட்டு ராணுவப் பயிற்சிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 முன்னதாக, வரும் 31-ஆம் தேதியிலிருந்து ஜூன் 11-ஆம் தேதிக்குள் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதனால் மஞ்சள் கடல், கிழக்கு சீனக் கடலில் ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஜப்பான் கடலோரக் காவல் படைக்கு வட கொரியா திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT