உலகம்

காங்கோ: பயங்கரவாத தாக்குதலில் 17 போ் பலி

31st May 2023 02:03 AM

ADVERTISEMENT

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய ஏடிஎஃப் படையினா் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 17 போ் பலியாகினா்.

கீவு மாகாணம், பெனி பிராந்தியத்தில் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையே இந்தப் படுகொலைகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.நிலத்துக்காகவும், விலைமதிப்புள்ள தாதுப் பொருள் சுரங்கங்களுக்காகவும், தங்கள் மக்களைப் பாதுகாக்கவும் காங்கோவில் 120-க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

அவற்றில் ஏடிஎஃப் பயங்கரவாதிகள் மட்டும் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நடத்திய தாக்குதல்களில் இதுவரை பொதுமக்கள் 370 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT