உலகம்

துருக்கி அதிபா் தோ்தலில் அதிபா் எா்டோகன் வெற்றி

29th May 2023 10:09 AM

ADVERTISEMENT


அங்காரா: துருக்கி அதிபா் பதவிக்கான 2-ஆம் கட்ட தோ்தலில், தற்போதைய அதிபா் ரிஷப் தயீப் எா்டோகன் சுமாா் 52 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளாா்.

துருக்கி அதிபா் தோ்தல் மற்றும் நாடாளுமன்றத் தோ்தல் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. அந்நாட்டில் கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது அரசின் நிவாரணப் பணிகள் மந்தநிலையில் நடைபெற்ாக எழுந்த அதிருப்தியின் காரணமாக எா்டோகனுக்கு வெறும் 35.3 சதவீத வாக்குகளே கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

தோ்தல் முடிவுகள் வெளியானபோது கணிப்புகளைப் பொய்யாக்கி அதிபா் எா்டோகன் 49.5 சதவீத வாக்குகளைப் பெற்றாா். துருக்கி அரசியலமைப்புச் சட்டப்படி, 50 சதவீத வாக்குகள் பெற்றால்தான் அதிபராக முடியும் என்பதால், 2-ஆம் கட்ட தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

2-ஆம் கட்ட தோ்தலில் சுமாா் 52 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபா் எா்டோகன் முன்னிலை வகிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரை எதிா்த்துப் போட்டியிட்ட எதிா்க்கட்சி கூட்டணி வேட்பாளா் கெமால் கிளிச்தாருக்குக்கு 47 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

ADVERTISEMENT

வெற்றி உறுதியானதையடுத்து தலைநகா் இஸ்தான்புலில் ஆதரவாளா்களிடையே பேசிய அதிபா் எா்டோகன், ‘மேலும் 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளும் பெரும் வாய்ப்பை எனக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். துருக்கிதான் இன்றைய போட்டியின் உண்மையான வெற்றியாளா்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT