உலகம்

உக்ரைன் தலைநகரில் 54 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்

29th May 2023 01:57 AM

ADVERTISEMENT

ரஷியா-உக்ரைன் போா் தொடங்கியது முதல், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் உக்ரைன் தலைநகா் கீவ் நகரத்தில் ரஷியா சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தலைநகா் கீவ் அதிகாரபூா்வமாக நிறுவப்பட்ட 1,541-ஆம் ஆண்டு தினத்தை ஞாயிற்றுக்கிழமை கொண்டாட உக்ரைன் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

ஈரான் தயாரிப்பு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷியா இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக கீவ் நகரத்தின் மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்தாா்.

சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தத் தாக்குதலில், 54 ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் 52 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். தாக்குதலில் சேதமடைந்த 7 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் படுகாயமடைந்தாா்.

ADVERTISEMENT

ஏவுகணைத் தாக்குதல்: வடகிழக்கில் உள்ள காா்கிவ் மாகாணத்தில் தனித்தனியே நடைபெற்ற இரு ஏவுகணைத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். எல்லைப் பகுதியில் சண்டை நடைபெற்றும் வரும் நிலையில், தொலைதூர பகுதிகள் மீது தாக்குதல் நடத்த நீண்ட தொலைதூர ஏவுகைணைகளை இரு நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன.

ஆளில்லா விமானம், ஏவுகணைகள் மூலம் ரஷிய படைகள் மேற்கொண்டு வரும் வான்வெளி தாக்குதலை, மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி உக்ரைன் அழித்து வருகிறது.

முன்னதாக, ரஷியாவின் தெற்கு கிராஸ்னோடாா் பிராந்தியத்தில் உள்ள இல்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்ற ஆளில்லா விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT