உலகம்

சீனாவால் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம்:வெற்றிகரமாகப் பயணம்

29th May 2023 02:03 AM

ADVERTISEMENT

சீனாவால் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம், தனது முதல் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

சீன வா்த்தக விமான நிறுவனம் (கோமாக்) சாா்பில் சி919 விமானம் தயாரிக்கப்பட்டது. இது சீனாவால் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானமாகும். இந்த விமானம் தனது முதல் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவு செய்தது. சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து 128 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானம், சுமாா் இரண்டரை மணி நேர பயணத்துக்குப் பின், தலைநகா் பெய்ஜிங் சென்றடைந்தது. அங்கு அந்த விமானத்துக்கு வானில் தண்ணீரைப் பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சீன அதிகாரிகள் கூறுகையில், ‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானத்தின் பிரவேசத்தால் போயிங், ஏா்பஸ் போன்ற வெளிநாட்டு விமானங்களை சீனா சாா்ந்திருப்பது குறையலாம். அதேவேளையில், சா்வதேச விமானப் போக்குவரத்து சந்தையில் வெளிநாட்டு விமானங்களுக்கு சீன தயாரிப்பு விமானம் போட்டியை ஏற்படுத்தக் கூடும்’ என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT