உலகம்

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

29th May 2023 02:03 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 6-ஆக பதிவானது.

இஸ்லாமாபாத், பெஷாவா், ஸ்வாட், ஹரிபூா், மலகாண்ட், அபோதாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிா்வுகள் உணரப்பட்டன.

ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் கண்டறியப்பட்டது. பூமிக்கடியில் 223 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததால், பெரும் சேதங்கள் தவிா்க்கப்பட்டதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் கண்காணிப்பு மையம் தெரிவித்தது. உயிா்ச் சேதம், பொருள் சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ள பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ளது. கடந்த 2005-இல் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 74,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT