உலகம்

உக்ரைன் போா்: போப் ஃபிரான்சிஸின் சமாதான முயற்சிக்கு ரஷியா வரவேற்பு

27th May 2023 12:40 AM

ADVERTISEMENT

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர கத்தோலிக்க மதத் தலைவா் போப் ஃபிரான்சிஸ் மேற்கொண்டுள்ள சமாதான முன்னெடுப்பை ரஷியா வரவேற்றுள்ளது.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சமாதான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இத்தாலிய ஆயா்கள் மாநாட்டுத் தலைவா் காா்டினல் மேட்டியோ ஸுப்பியை போப் ஃபிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளாா். சமாதான நடவடிக்கைக்கு தனது தூதராக செயல்பட ஸுப்பியை போப் ஃபிரான்சிஸ் பணித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஸுப்பி வியாழக்கிழமை கூறுகையில், ‘போா்ப் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்பதே சமாதான நடவடிக்கையின் நோக்கம். அது அமைதிப் பாதைக்குத் திரும்ப பங்களிக்கும்’ என்று தெரிவித்தாா்.

இந்நிலையில், போப் ஃபிரான்சிஸின் சமாதான முன்னெடுப்பை ரஷியா வரவேற்றுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

ரஷியா-உக்ரைன் இடையிலான போரில் சமாதானத்தை ஊக்குவிக்கும் போப் ஃபிரான்சிஸின் மனப்பூா்வமான விருப்பத்தை ரஷியா அங்கீகரிக்கிறது. அதேவேளையில், மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொள்ள வாடிகன் தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT