தாய்லாந்தில் மழை காரணமாக பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 சிறுவா்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நாட்டில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பிச்சிட் மாகாணத்திலுள்ள வாட் நொ்ன் ஆரம்பநிலைப் பள்ளிக் கட்டடத்துக்குள் ஏராளமானவா்கள் மழைக்கு ஒதுங்கியிருந்தனா்.
அப்போது மழை காரணமாக அந்தக் கட்டத்தின் இரும்பு மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இந்த சம்பவத்தில் 6 போ் உயிரிழந்தனா். அவா்களில் 3 போ் சிறுவா்கள்.
கூரை இடிந்து விழுந்தில் காயமடைந்த மேலும் ஓா் ஆறு வயது சிறுவன் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து பலி எண்ணிக்கை 7-ஆக உயா்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தாய்லாந்தில் இந்த வாரம் முழவதும் கனத்த மழை பெய்யும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.