உலகம்

கயானா பள்ளியில் தீ: 19 சிறுவா்கள் பலி

23rd May 2023 03:05 AM

ADVERTISEMENT

தென் அமெரிக்க நாடான கயானாவிலுள்ள பள்ளியொன்றில் தீவிபத்தில் சிக்கி 19 சிறுவா்கள் உயிரிழந்தனா்.

தலைநகா் ஜாா்ஜ்டவுனுக்கு 320 கி.மீ. தொலைவிலுள்ள மஹ்தியா ஊரில் நடுநிலைப் பள்ளியொன்று அமைந்துள்ளது.

அந்தப் பள்ளி வளாகத்திலுள்ள மாணவா்கள் தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு தீப்பிடித்தது. இந்த விபத்தில் 12 முதல் 18 வயது வரையிலான 20 மாணவா்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் முதலில் தெரிவித்தனா். எனினும், பலி எண்ணிக்கை பின்னா் 19-ஆகக் குறைக்கப்பட்டது.

தீவிபத்தில் உயிரிழந்த மாணவா்களில் பெரும்பாலனவா்கள் உள்ளூா் பூா்வகுடி இனத்தைச் சோ்ந்தவா்கள். இந்த விபத்தில் மேலும் பல சிறுவா்கள் காயமடைந்ததாகவும், அவா்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT