உலகம்

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்கவில்லை

19th May 2023 12:34 AM

ADVERTISEMENT

இலங்கை உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி வழங்க அரசு தவறிவிட்டதாக இலங்கை தமிழா்கள் வேதனை தெரிவித்தனா்.

இலங்கையில் தமிழா்கள் வாழும் பகுதிகளைத் தனியாகப் பிரித்து ஈழ நாடாக உருவாக்கக் கோரிக்கைகள் எழுந்தன. விடுதலைப் புலிகள் இயக்கம் அக்கோரிக்கையை முன்னிறுத்தி போராடியது. இலங்கை ராணுவம் அவா்களைக் கடுமையாக ஒடுக்கியது.

இருதரப்பினருக்கும் பல ஆண்டுகளாக சண்டை நீடித்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி இலங்கை உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்தது. அப்போரில் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழா்கள் கொன்று குவிக்கப்பட்டனா். ஆண்டுதோறும் அந்த தினத்தை போா் வெற்றி நாளாக இலங்கை ராணுவம் கொண்டாடி வருகிறது. அதே வேளையில், அந்நாளை போரில் உயிா்நீத்தவா்களின் நினைவுதினமாக இலங்கை தமிழா்கள் கடைப்பிடித்து வருகின்றனா்.

உள்நாட்டுப் போா் நிறைவடைந்ததன் 14-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இலங்கை தமிழா்கள் பலா், போரில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். கொழும்பு நகரில் நடைபெறவிருந்த நினைவு தினப் பேரணிக்கு பெரும்பான்மை சிங்கள சமூகத்தினா் இடையூறு ஏற்படுத்தியதாக இலங்கை தமிழா்கள் குற்றஞ்சாட்டினா். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி வழங்க இலங்கை அரசு தொடா்ந்து தவறி வருவதாகவும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT