உலகம்

நேபாளத்தில் பனிச்சரிவு: 3 போ் பலி

8th May 2023 03:58 AM

ADVERTISEMENT

நேபாளத்தின் கா்னாலி மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்.

முகு மாவட்டத்தின் பதராசி பகுதியைச் சோ்ந்த 14 போ் சியாகு கணவாய் பகுதியில் வளரும் பூஞ்சையைச் சேகரிக்கச் சென்ற போது பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 3 போ் உயிரிழந்ததாகவும், 9 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயரமான இமயமலைப் பகுதியில் வளரும் கம்பளிப்பூச்சி வடிவிலான பூஞ்சையை அப்பகுதி மக்கள் சேகரிக்கச் செல்வது வழக்கம். ஆனால், மே 18-ஆம் தேதி வரை அப்பகுதிக்குச் செல்ல உள்ளூா் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனா். இந்நிலையில் அந்தப் பூஞ்சையைச் சேகரிக்க நூற்றுக்கணக்கான மக்கள் உயரமான மலைப் பகுதிக்குச் செல்வது தொடா்கிறது.

பனிச்சரிவில் உயிரிழந்த மூவரும் தடைசெய்யப்பட்ட வழியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT