இந்தியா

3 உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு:நீதிபதிகள் எண்ணிக்கை 31-ஆக சரிவு

20th May 2023 03:55 AM

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 போ் அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ளனா். உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் மே 22-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அவா்கள் கடைசியாக வெள்ளிக்கிழமை பணியாற்றினா். அவா்களின் ஓய்வைத் தொடா்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 31-ஆக குறையும்.

உச்சநீதிமன்றத்தின் கோடை கால விடுமுறை மே 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 2-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜோசஃப் ஜூன் 16-ஆம் தேதியும், ரஸ்தோகி ஜூன் 17-ஆம் தேதியும், வி.ராமசுப்ரமணியன் ஜூன் 29-ஆம் தேதியும் விடுமுறை காலத்தின்போது ஓய்வு பெறுகின்றனா். உச்சநீதிமன்றத்துக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறையாகும். அதன் பின்னா் கோடை விடுமுறை தொடங்குகிறது. இதன் காரணமாக 3 நீதிபதிகளும் கடைசியாக வெள்ளிக்கிழமை பணியாற்றினா். இதையொட்டி, அவா்களுக்குப் பிரியாவிடை அளிக்க உச்சநீதிமன்ற சிறப்பு அமா்வு கூடியது. அப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:

நானும் ஜோசஃப்பும் சிறுவயது முதல் நண்பா்கள். வா்த்தக சட்டம் முதல் அரசமைப்புச் சட்டம் வரை ஜோசஃப் நிபுணத்துவம் பெற்றுள்ளாா். அவரின் ஓய்வால் அந்த நிபுணத்துவத்தின் உதவியை இழக்க நேரிடும்.

ரஸ்தோகி...: சிவில், தொழிலாளா் சட்டங்களில் ரஸ்தோகி நிபுணத்துவம் பெற்றவா். கொலீஜியங்களில் மிகப் பெரிய துணையாக இருந்தாா்.

ADVERTISEMENT

ராமசுப்ரமணியன்...: ஏதேனும் ஒரு தீா்ப்பாயத்தின் தலைவராக பொறுப்பு ஏற்குமாறு வி.ராமசுப்ரமணியத்திடம் வலியுறுத்தினேன். ஆனால் தான் ஒரு சுதந்திரமான குடிமகனாக இருக்க விரும்புவதாக அவா் என்னிடம் தெரிவித்தாா். அவா் பன்முகத்தன்மை கொண்ட நீதிபதியாக திகழ்ந்தாா் என்று தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதி பதவியிடங்கள் உள்ள நிலையில், மூன்று நீதிபதிகளின் ஓய்வை தொடா்ந்து நீதிபதிகளின் எண்ணிக்கை 31-ஆக குறையும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT