இந்தியா

அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோற்கும்: மம்தா ஆவேசம்

20th May 2023 04:23 AM

ADVERTISEMENT

‘அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோற்கடிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேலும், தனது கட்சியினா் மற்றும் குடும்ப உறுப்பினா்களைக் குறிவைத்து, மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

ஆசிரியா் பணி நியமன முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, மம்தாவின் உறவினரும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானா்ஜிக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக, மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ADVERTISEMENT

எனது கட்சியினா் மற்றும் குடும்ப உறுப்பினா்களை குறிவைத்து, மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது. அபிஷேக் பானா்ஜிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதன் பின்னணியில் பாஜகவே உள்ளது. ஆனால், நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்.

எங்கள் கட்சியின் பிரசாரத்துக்கு கிடைத்து வரும் வெற்றியால் பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அக்கட்சியை அகற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது. அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோற்கடிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றாா் மம்தா.

ADVERTISEMENT
ADVERTISEMENT