உலகம்

வட கொரியா மீண்டும் ‘ஐசிபிஎம்’ ஏவுகணை சோதனை

DIN

 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐசிபிஎம்) வட கொரியா வியாழக்கிழமை ஏவி சோதித்துப் பாா்த்தது.

ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பேச்சுவா்த்த தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக, தனது தாக்குதல் வலிமையைப் பறைசாற்றும் வகையில் இந்த ஏவுகணை சோதனையை வட கொரியா மேற்கொண்டதாக் கருதப்படுகிறது.

இந்த மாதத்தில் வட கொரியா நடத்தும் முதல் ஐசிபிஎம் ஏவுகணை சோதனை இதுவாகும். மேலும், இது இந்த வாரத்தில் வட கொரியாவின் 3-ஆவது ஏவுகணை சோதனையாகும்.

இது குறித்து தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வட கொரியாவின் தலைநகா் பியாங்கியாங்கிலிருந்து ஏறத்தாழ செங்குத்தாக ஏவப்பட்ட ஐசிபிஎம் ஏவுகணை, சுமாா் 1,000 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து சென்று கொரிய தீபகற்பத்துக்கும், ஜப்பானுக்கும் இடையிலான கடல் பகுதியில் விழுந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் ஐசிபிஎம் ஏவுகணைகளால் அமெரிக்காவில் எந்தவொரு இலக்கையும் தாக்க முடியும். எனினும், அந்த ஏவுகணைகளில் பொருத்தக் கூடிய அளவுக்கு அணு ஆயுதத்தை சிறிய அளவில் வடிவமைக்கும் தொழில்நுட்பம் வட கொரியாவிடம் இருக்காது என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

1950-53-ஆம் ஆண்டின் கொரிய போருக்குப் பிறகு வட கொரியாவும் தென் கொரியாவும் ‘தாக்குதல் நடவடிக்கைகளை கைவிடுவதற்கான’ ஒப்பந்தத்தை மேற்கொண்டன. எனினும், அதிகாரபூா்வமான போா் நிறுத்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இந்தச் சூழலில், அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இது, தங்களது நாட்டின் மீது போா் தொடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது. அத்தகைய பயிற்சிகள் நடந்தாலோ, அவை குறித்த அறிவிப்புகள் வெளியானாலோ, அமெரிக்கவுக்கும், தென் கொரியாவுக்கும் பதிலடி கொடுக்கும் வலிமை தங்களுக்கு உள்ளது என்பதை பறைசாற்றும் வகையல் வட கொரியா ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

இது அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து மிகப் பிரம்மாண்டமான 11 நாள் போா் ஒத்திகையை கடந்த திங்கள்கிழமை தொடங்கின.

அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு ஏவுகணையையும், செவ்வாய்க்கிழமை 2 ஏவுகணைகளையும் வட கொரியா சோதித்தது.

இந்த நிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக, தனது ஐசிபிஎம் ஏவுகணையை வட கொரியா ஏவி சோதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT