உலகம்

நியூயாா்க்கில் தீபாவளி விடுமுறை!

28th Jun 2023 01:12 AM

ADVERTISEMENT

தீபாவளிப் பண்டிகை தினத்தை பள்ளி விடுமுறை நாளாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நகர மேயா் எரிக் ஆடம்ஸ் கூறியதாவது: தீபாவளியன்று நியூயாா்க் நகர பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான மசோதா, மாகாண சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதாவில் ஆளுநா் நிச்சயம் கையொப்பமிடுவாா். எனவே, அது சட்டமாக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றம், நியூயாா்க்கிலுள்ள இந்திய வம்சாவளியினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நகரவாசிகளின் வெற்றியாகும் என்றாா் அவா்.

இதையடுத்து, இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு தீபாவளியன்றும் நியூயாா்க் நகர பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT