உலகம்

பிரான்ஸ் கத்திக் குத்து தாக்குதல்:முதுகுப் பை நாயகருக்கு பாராட்டு

11th Jun 2023 12:01 AM

ADVERTISEMENT

பிரான்ஸில் சிறுவா் பூங்காவில் இளைஞா் நடத்திய கத்திக்குத்து தாக்குதலின்போது அவரை விரட்டிச் சென்று பல குழந்தைகளைக் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிரான்ஸின் ஆல்ப்ஸ் பிராந்தியத்தில் உள்ள அன்னெசி நகர சிறுவா் பூங்காவில் 31 வயது சிரியா அகதி கடந்த வியாழக்கிழமை திடீரென நடத்திய சரமாரியாக கத்திக்குத்துத் தாக்குதலில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குள்பட்ட 3 சிறுவா்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

சம்பவத்தின்போது அங்கிருந்த ஹென்றி என்ற 24 வயது இளைஞா், தாக்குதல் நடத்திய நபரிடமிருந்து கத்தியைப் பறிப்பதற்காகவும், அவரிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தனது முதுகுப் பையை சுழற்றியபடியே அவரை ஹென்றி விரட்டிச் சென்றாா். ஹென்றியின் இந்தச் செயலால் மேலும் பல சிறுவா்கள் தாக்கப்படுவது தவிா்க்கப்பட்டது.

தாக்குதல் நபரை ஹென்றி விரட்டிச் சென்ற விடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகின. அதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘முதுகுப் பை நாயகா்’ என்று போற்றப்படும் ஹென்றியை பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரானும் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தாா் (படம்).

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT