உலகம்

சூடானில் முதல்முறையாக முழு அமைதி

11th Jun 2023 12:04 AM

ADVERTISEMENT

சூடானில் சண்டையிட்டு வரும் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்பட்டுள்ள 24 மணி நேர சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு அங்கு சனிக்கிழமை முழு அமைதி நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தலைநகா் காா்ட்டூமில் வசிக்கும் ஹமீத் இப்ராஹிம் என்பவரை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறுகையில், சனிக்கிழமை முழுவதும் நகரில் ஒரு குண்டு சப்தம் கூட கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை சுமாா் 1,800 போ் பலியாகியுள்ளா்.

மோதல் தொடங்கியதற்குப் பிறகு பல முறை சண்டை நிறுத்த அறிவிப்புகள் வெளியாகியிருந்தாலும், சனிக்கிழமைதான் முதல்முறையாக முழு அமைதி நிலவியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT