சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை உணவகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
வெள்ளியன்று இரவு தொடங்கிய இந்த தாக்குதல் சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. சம்பவ இடத்தில் திரண்ட ராணுவம் மற்றும் போலீஸார் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 84 பேர் உணவகத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அல்-கெய்தாவின் கிழக்கு ஆப்பிரிக்காவின் இணை நிறுவனமாக அல்-ஷபாப் இந்த தாக்குதலுக்கு பொற்றுபேற்றுள்ளது.
படிக்க: ஆந்திர அமைச்சர் ரோஜா மருத்துவமனையில் அனுமதி
இந்த உணவகத்தில் வெளிநாட்டுப் பயணிகள், அரசியல் தலைவர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் ராணுவம் மற்றும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.