உலகம்

விமான விபத்தில் மாயமான 4 குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் அமேசான் காடுகளில் உயிருடன் மீட்பு

DIN

கொலம்பியாவில் விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து காணாமல் போன 4 குழந்தைகள் 40 நாட்களுக்குப் பிறகு அமேசான் காடுகளில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

கொலம்பியாவில் கடந்த மே 1ஆம் தேதி செஸ்னா 206 இலகுரக விமானம் ஒன்று அமேசானாஸ் மாகாணத்தில் உள்ள அரராகுவாரா மற்றும் சான் ஜோஸ் டெல் குவேரியார் ஆகிய நகரங்களுக்கு இடையே பறந்து கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனது. விபத்தைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மோப்ப நாய்களுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து கடந்த மாதம், விமானத்தின் பாகங்களோடு விமானி மற்றும் இரண்டு பெரியவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இருப்பினும் அதில் பயணித்த மற்ற 4 குழந்தைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் தொடர் தேடுதல் நடவடிக்கையின் பயனாக 4 குழந்தைகளும் 40 நாட்களுக்குப் பிறகு அமேசான் காடுகளில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு அதிபர் பெட்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி. கடந்த 40 நாட்களுக்கு முன் கொலம்பிய காடுகளில் காணாமல்போன குழந்தைகள் 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை குழந்தைகளுடன் பேசுவேன் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அடர் காடுகளில் இருந்து 40 நாட்களுக்குப் பிறகு 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. விபத்தில் இறந்த பெரியவர்களில் ஒருவரான ரனோக் முக்குடுய்-தான் நான்கு குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவா் கைது

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT