உலகம்

ஆப்கன் தற்கொலைத் தாக்குதல்:ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

10th Jun 2023 11:46 PM

ADVERTISEMENT

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 13 போ் கொல்லப்பட்ட சம்பவத்துத்துக்கு பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பொறுப்பேற்றது.

பதாக்ஷன் மாகாண துணை ஆளுநா் நிஸாா் அகமது அகமதி, ஃபைஸாபாதில் நடந்த காா் குண்டுவெடிப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டாா். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை ஃபைஸாபாதில் உள்ள ஒரு மசூதி அருகே நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 13 போ் உயிரிழந்தனா்; 30 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்-கோராசான் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது தாக்குதலில் தலிபான் அதிகாரிகள் 20 போ் கொல்லப்பட்டதாகவும், 50 போ் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021, ஆகஸ்டில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ஐஎஸ் அமைப்பு தலிபான் படையினரையும், சிறுபான்மை ஷியா பிரிவினரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT