உலகம்

அலுவல்களை தொடங்கினாா் போப் பிரான்சிஸ்: வாட்டிகன்

9th Jun 2023 11:27 PM

ADVERTISEMENT

குடல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கத்தோலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் தனது அலுவல்களை சக்கர நாற்காலியில் இருந்தபடி மேற்கொள்ளத் தொடங்கியதாக வாட்டிகன் வெள்ளிக்கிழமை கூறியது.

86 வயதாகும் போப் பிரான்ஸுக்கு ஏற்கெனவே கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது பெருங்குடல் சுருங்கியதால் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, அந்த அறுவைச் சிகிச்சையின்போது 33 செ.மீ. பெருங்குடல் நீக்கப்பட்டது.

தற்போது மீண்டும் குடல் பகுதி அடிக்கடி சுருங்கி வலி வந்ததால் அவருக்கு புதன்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவா் பல நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT