உலகம்

போப் பிரான்சிஸுக்கு குடல் அறுவை சிகிச்சை

DIN

கத்தோலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸுக்கு புதன்கிழமை குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

86 வயதாகும் போப் பிரான்ஸுக்கு ஏற்கெனவே கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது பெருங்குடல் சுருங்கியதால் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, அந்த அறுவைச் சிகிச்சையின்போது 33 செ.மீ. பெருங்குடல் நீக்கப்பட்டது. அப்போது அவா் 10 நாள்கள் மருத்துவமனையில் இருந்தாா்.

தற்போது மீண்டும் குடல் பகுதி அடிக்கடி சுருங்கி வலி ஏற்படுவதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக வாட்டிகன் வட்டாரங்கள் தெரிவித்தன.புதன்கிழமை அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவா் பல நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறினா்.

ஏற்கெனவே, தொற்று காரணமாக கடந்த மாா்ச் மாத இறுதியில் 3 நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், சிகிச்சை முடிந்து திரும்பியபோது ‘நான் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று நகைச்சுவையாகக் கூறியது நினைவுகூரத்தக்கது.

அறுவை சிகிச்சைக்காக அவா் நீண்ட நேரம் மயக்க நிலையில் இருக்கும்போதும் அவரது கத்தோலிக்க தலைமைப் பொறுப்பு தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT