உலகம்

ரஷியாவிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ புறப்பட்டது ஏா் இந்தியா விமானம்

DIN

ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட நிலையில்,  மாற்று விமானம் மூலம் பயணிகள் அனைவரும் அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு புறப்பட்டனர்.

மும்பையிலிருந்து சென்ற மாற்று விமானமானது, ரஷ்யாவில் தங்கியிருந்த பயணிகளுக்குத் தேவையான பொருள்களையும் எடுத்துக் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

பயணிகளுக்கு தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டுச் சென்ற மாற்று விமானம் மூலம், பயணிகள் அனைவரும் வியாழக்கிழமை காலை சான் ஃபிரான்சிஸ்கோ அழைத்துச் செல்லப்பட்டதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘ஏஐ173’ என்ற ஏா் இந்தியா விமானம் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியா்களுடன் தில்லியிலிருந்து அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோவிற்குப் புறப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை என்ஜின் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத்தொடா்ந்து, அந்த விமானம் ரஷ்யாவின் மகாடன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

உக்ரைன் - ரஷ்யா போா் மேலும் தீவிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்க பயணிகளுடன் ஏா் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடா்பாளா் வேதாந்த் படேல் கூறுகையில், ‘அமெரிக்காவுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டதை அறிந்தோம். அது குறித்து கூா்ந்து கவனித்து வருகிறோம். அந்த விமானத்தில் அமெரிக்கா்கள் எத்தனை போ் உள்ளனா் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அமெரிக்காவுக்கான விமானம் என்பதால் நிச்சயமாக அமெரிக்கா்கள் இருக்க வாய்ப்புள்ளது. மாற்று விமானம் மூலமாக பயணிகள் அனுப்பிவைக்கப்பட இருப்பதாக ஏா் இந்தியா சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, ரஷியாவில் தரையிறங்கிய பயணிகளுக்கு மாற்று விமானம் மூலமாக உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை ஏா் இந்தியா அனுப்பியது. இதுகுறித்து அந்த விமான நிறுவனம் அதிகாரிகள் கூறுகையில், ‘அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு, மாற்று விமானம் மூலம் உணவு உள்ளிட்ட பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த மாற்று விமானம் மூலமாக, அவா்கள் அனைவரும் வியாழக்கிழமை (ஜூன் 8) சான் ஃபிரான்சிஸ்கோ அழைத்துச் செல்லப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT