உலகம்

பிரான்ஸில் கத்திக்குத்து: 8 சிறுவர்கள் காயம்

8th Jun 2023 03:50 PM

ADVERTISEMENT

 

பிரான்ஸில் உள்ள பூங்காவில் சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 8 சிறுவர்கள் காயமடைந்தனர். 

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் அன்னெசியில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் சிறுவர்களை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 9.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 

படிக்க: ரோபோ உதவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க முயற்சி!

ADVERTISEMENT

சிறுவர்களை கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். குத்தப்பட்டதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். மேலும் காயமடைந்த 8 சிறுவர்களில் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கத்திக்குத்து நிகழ்த்தியவர் சிரியாவை சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags : France
ADVERTISEMENT
ADVERTISEMENT