உலகம்

ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி!

8th Jun 2023 01:00 PM

ADVERTISEMENT


ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். 

வடக்கு ஆப்கானிஸ்தானில் சிறியரக பேருந்தில், திருமண விழாவுக்காக உறவினர்கள் சென்றுள்ளனர். சார்-இ-புல் மாகாணத்திற்குட்பட்ட மலைப்பாதைகளில், பேருந்து சென்றுகொண்டிருந்தது.

சய்யாத் மாவட்டத்தை நோக்கிச்சென்ற இந்த பயணத்தில் ஓட்டுநரின் கவனக் குறைவால், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 12 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தானில் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. மோசமான சாலை வசதிகளும், முறையான ஓட்டுநர்கள் இன்றி நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT