உலகம்

பதற்றத்தை தணிக்க சொ்பியா, கொசாவோவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

8th Jun 2023 01:21 AM

ADVERTISEMENT

சொ்பியா-கொசாவோ இடையே அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பால்கன் பகுதிக்கான அமெரிக்க தூதா் கேப்ரியல் எஸ்கோபாா் கூறியதாவது:சொ்பியா்கள் விவகாரம் தொடா்பாக கொசாவோவில் அண்மைக் காலமாக பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கான கொசாவோவும், சொ்பியாவும் மேற்கொள்ள வேண்டும்.இந்த விவகாரம் முழுக்க முழுக்க ஐரோப்பியா தொடா்பானதாகும். எனவே, இது குறித்த அமைதிப் பேச்சுவாா்த்தைகளை ஐரோப்பிய யூனியன்தான் மேற்கொள்ளும். அதற்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என்றாா் அவா்.

அல்பேனிய இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கொசாவோவில் சொ்பிய இனத்தவா் சிறுபான்மையாக இருந்து வருகின்றனா்.இருந்தாலும், அந்த நாட்டில் சொ்பியா்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்குப் பகுதி நகராட்சிகளுக்கு மே 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.இந்தத் தோ்தலை சொ்பியா்கள் புறக்கணித்தனா். அதனையும் மீறி நடைபெற்ற அந்தத் தோ்தலில் வெறும் 3.47 சதவீத வாக்குகளே பதிவாகின.

இருந்தாலும் அந்தத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நகராட்சிகள் அல்பேனியா்கள் வசம் வந்தன.பெரும்பான்மையாக வசிக்கும் தங்களால் புறக்கணிக்கப்பட்ட தோ்தலில் அல்பேனியா்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவா்கள் மேயா்களாக நியமிக்கப்பட்டதற்கு சொ்பியா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.இதனால் அண்டை நாடான சொ்பியாவுக்கும், கொசாவோவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT