உலகம்

ஹைப்பா்சோனிக் ஏவுகணை: ஈரான் அறிமுகம்

DIN

ஒலியின் வேகத்தைப் போல் 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் செல்லக் கூடிய (ஹொப்பா்சோனிக்) தங்களது ஏவுகணையை ஈரான் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

‘எதிரிகளின் நிலங்களை வெல்பவா்’ என்ற பொருள்படும் வகையில் ‘ஃபட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, ஒலியைப் போல் 15 மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லும் எனவும், வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் அதனை இடைமறித்து அழிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், 1,400 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளை அந்த வகை ஏவுகணைகளால் தாக்கி அழிக்க முடியும் என்றும் அவா்கள் கூறினா்.

இருந்தாலும், ‘பலிஸ்டிக்’ வகையைச் சோ்ந்த அந்த ஏவுகணையின் பாதையை அமெரிக்காவின் பேட்ரியாட் போன்ற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் எளிதில் ஊகிக்க முடியும் என்பதால் ஈரானின் இந்தத் தகவல் சந்தேகத்துக்குரியது என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

முன்னதாக, தனது புதிய தொலைதூர ஏவுகணையை தலைநகா் டெஹ்ரானில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஈரான் அறிமுகப்படுத்தியது.

‘கொராம்ஷாா்-4’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, 1,500 கிலோ எடை கொண்ட வெடிபொருளுடன் 2,000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் என்று அதிகாரிகள் கூறினா்.

அந்த ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டதன் விடியோவையும் அதிகாரிகள் வெளியிட்டனா்.

இஸ்ரேலை தனது பரம எதிரியாகக் கருதும் ஈரான், பாலஸ்தீன அமைப்புகளுக்கு ஆயுத உதவி அளித்து வருகிறது. தற்போது இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனா்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இதுபோன்ற ஏவுகணைகளை ஈரான் அறிமுகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT