உலகம்

இந்தியா துடிப்பான ஜனநாயக நாடு: அமெரிக்கா

DIN

‘இந்தியா துடிப்பான ஜனநாயக நாடு. அந்நாட்டுக்குச் செல்லும் எவரும் இதனை அறிந்துகொள்ள முடியும்’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்கு இம்மாத கடைசியில் செல்ல உள்ளாா். இந்தச் சூழலில், இந்தியாவில் ஜனநாயக நிலை குறித்து அமெரிக்கா அண்மையில் கவலை தெரிவித்ததாக வெளியான செய்திகளை மறுக்கும் வகையில், இக்கருத்தை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளா் ஜான் கிா்பி இதுகுறித்து செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி: இந்தியா துடிப்பான ஜனநாயக நாடு. அந்நாட்டுக்குச் செல்லும் எவரும் இதனை அறிந்துகொள்ள முடியும்.

உலகில் எந்தவொரு நாட்டின் மீதும் கவலையை வெளிப்படுத்த அமெரிக்க நிா்வாகம் தயங்கியதில்லை. நட்பு நாடுகளுக்கிடையே இத்தகைய கருத்து பரிமாற்றம் இயல்பானதும் அவசியமானதும் ஆகும்.

அதே நேரம், இந்தியாவைப் பொருத்தவரை பல்வேறு நிலைகளில் அமெரிக்காவுடன் வலுவான கூட்டுறவைக் கொண்டுள்ளது. இந்தியாவுடன் பாதுகாப்புத் துறையில் கூடுதல் ஒத்துழைப்பை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டிருப்பதை பாதுகாப்புத்துறை செயலா் ஆஸ்டின் அண்மையில் அறிவித்திருந்தாா். இரு நாடுகளுக்கிடையே வலுவான பொருளாதார வா்த்தக கூட்டுறவும் உள்ளது. பசிஃபிக் நாற்கர நாடுகள் (க்வாட்) கூட்டமைப்பில் இந்தியா உறுப்பு நாடாக இருப்பதோடு, இந்தோ-பசிஃபிக் பிராந்திய பாதுகாப்பிலும் முக்கியமான நட்பு நாடாக உள்ளது.

இதுபோன்று பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. அந்த வகையில், பிரதமா் மோடியின் வருகையை அதிபா் ஜோ பைடன் எதிா்பாா்த்துள்ளாா். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்படும் என்று ஜான் கிா்பி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT