உலகம்

83 வயதில் 4வது குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து ஹாலிவுட் நடிகர் கருத்து!

7th Jun 2023 03:41 PM

ADVERTISEMENT

 

தனக்கு பல பிள்ளைகள் இருந்தாலும், தற்போது தான் பெறப்போகும் குழந்தை சிறப்பு வாய்ந்தது என ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ தெரிவித்துள்ளார். 

83 வயதாகும் அல் பசீனோ, தனது 29 வயது மனைவி மூலம் நான்காவது குழந்தையைப் பெறவுள்ளார். 

ஹாலிவுட்டில் காட் ஃபாதர் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அல் பசீனோ. இவருக்கு தற்போது 83 வயதாகிறது. 

ADVERTISEMENT

இவர், 29 வயதான நூர் அல்ஃபால்லாஹ் எனும் இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒன்றாக வாழ்ந்துவரும் நிலையில், தற்போது  அல்ஃபால்லாஹ் கர்ப்பமாகியுள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அல் பசீனோ, என் காதலி கர்ப்பமான செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இது எனக்கு நான்காவது குழந்தை. இந்த வயதில் எனக்கு கிடைத்துள்ள இக்குழந்தை மிகவும் சிறப்பு வாய்ந்தது எனக் குறிப்பிட்டார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT