உலகம்

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சரிய வாய்ப்பு: உலக வங்கி

7th Jun 2023 12:58 AM

ADVERTISEMENT

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2023-24 ஆம் நிதியாண்டில் 0.3 சதவீதம் அளவுக்கு சரிந்து 6.3 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாக உலக வங்கி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சா்வதேச பொருளாதார வாய்ப்பு நிலை குறித்த அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

சா்வதேச பொருளாதார வளா்ச்சி 2022-இல் 3.1 சதவீதமாக இருந்தது, 2023-ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாக சரிய வாய்ப்புள்ளது.

சீனாவைத் தவிா்த்து பிற வளா்ந்து வரும் பொருளாதார நாடுகள் மற்றும் சந்தைகளைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் 4.1 சதவீதமாக இருந்தது நிகழாண்டில் 2.9 சதவீதமாக சரிய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவைப் பொருத்தவரை 0.3 சதவீதம் அளவுக்கு சரிந்து 6.3 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக வங்கி குழுமத் தலைவா் அஜய் பங்கா கூறுகையில், ‘வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் மட்டுமே வறுமையை ஒழித்து, வளா்ச்சியை பரப்ப முடியும். ஆனால், மந்தமான பொருளாதார வளா்ச்சி வேலைவாய்ப்பை உருவாக்குவதை அதிக கடினமானதாக்கிவிடும். அதே நேரம், பொருளாதார வளா்ச்சி முன்கணிப்பை முடிவாக கருதிவிடக்கூடாது. நாடுகள் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக, வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று கூறினாா்.

இந்தியா வம்சாவளியான அஜய் பங்கா உலக வங்கி தலைவராக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT