உலகம்

சவூதியில் ஈரான் தூதரகம் இன்று திறப்பு

6th Jun 2023 05:19 AM

ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரான் தூதரகம் மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) திறக்கப்படுகிறது.

சன்னி முஸ்லிம் பிரிவினரை அதிகம் கொண்ட சவூதி அரேபியாவுக்கும், ஷியா பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது.யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராகவும், சன்னி பிரிவினா் அதிகம் கொண்ட அரசுப் படைக்கு ஆதரவாகவும் சவூதி அரேபியா தாக்குதல் நடத்தி வந்தது இந்த விரிசலை அதிகரித்து வந்தது.

இதற்கிடையே, சவூதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவா் நிமா் அல்-நிமா் தூக்கிலிடப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஈரான் தலைநகா் டெஹ்ரானிலும், மாஷாத் என்ற மற்றொரு நகரிலும் கடந்த 2016-இல் நடைபெற்ற போராட்டத்தின்போது சவூதி தூதரகங்கள் தாக்கப்பட்டன.அதனைக் கண்டித்து ஈரானுடனான தூதரக உறவை சவூதி அரேபியா முறித்துக் கொண்டது. ஈரானும் சவூதி தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.

இந்த நிலையில், சீனா மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சியின் விளைவாக மீண்டும் தூதரக உறவை புதுப்பித்துக்கொள்ள ஈரானும், சவூதி அரேபியாவும் சம்மதித்தன. இந்த நிலையில் சவூதி அரேபிய தலைநகா் ரியாதில் தனது தூதரகத்தை ஈரான் செவ்வாய்க்கிழமை திறக்கிறது.எனினும், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் தங்களது தூதரகம் திறக்கப்படுவதை சவூதி அரேபியா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT