உலகம்

கச்சா எண்ணெய் உற்பத்தி மேலும் குறைப்பு: ஒபெக் பிளஸ் முடிவு

DIN

உலக நாடுகளின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவிய கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து சரிவதைத் தடுக்க, அதன் உற்பத்தியை மேலும் குறைக்க ‘ஒபெக் பிளஸ்’ கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.

கடந்த அக்டோபா் மாதம் முதல், நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ‘ஒபெக் பிளஸ்’ நாடுகள் முடிவெடுத்தன. அதன்படி, சவூதி அரேபியா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எண்ணெய் உற்பத்தி குறைப்பைக் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்தன.

எனினும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா் சரிவைச் சந்தித்து வந்தது. ஐரோப்பிய நாடுகளில் நிலவிய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எரிசக்தியின் விலைச்சரிவு பெரிதும் உதவியது. அமெரிக்காவில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பெட்ரோலியப் பொருள்களை விடுவிக்க அதிபா் ஜோ பைடன் கடந்தாண்டு உத்தரவிட்டதால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்த எண்ணெய் உற்பத்தி குறைப்பு முடிவு அமெரிக்காவைப் பெரிதாக பாதிக்கவில்லை.

இந்தச் சூழலில், ரஷியா, சவூதி அரேபியா உள்ளிட்ட 23 பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி நாடுகள் அடங்கிய ஒபெக் பிளஸ் கூட்டமைப்பின் கூட்டம், ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், எண்ணெய் விலை மேலும் சரிந்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்றும், கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைத்து விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுத்தினால் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் சவூதி அரேபியா அறிவுறுத்தியது. ஆனால், உற்பத்தியை மேலும் குறைக்க வேண்டாம் என ரஷியா வலியுறுத்தியது.

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, ஜூலை முதல் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாள்தோறும் 10 லட்சம் பீப்பாய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. ஏற்கெனவே செய்யப்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பை இந்த ஆண்டுக்குள் நீட்டிக்க, ஒபெக் பிளஸ் கூட்டமைப்பில் உள்ள இதர நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

SCROLL FOR NEXT