உலகம்

குடியரசுத் தலைவா் சுரிநாம் பயணம்

5th Jun 2023 09:03 AM

ADVERTISEMENT

பாரரிம்போ: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தென் அமெரிக்க நாடான சுரிநாமுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தாா்.

திரௌபதி முா்மு குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றதும் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். சுரிநாம் தலைநகரில் வந்திறங்கிய அவரை அந்நாட்டு அதிபா் சந்திரிகாபா்சாத் சந்தோகி விமான நிலையத்தில் வந்து முழு அரசு மரியாதையுடன் வரவேற்றாா்.

ஜூன் 6-ஆம் தேதி வரையிலான அவரது பயணத்தின்போது, சுரிநாமில் இந்தியா்கள் குடியேறிய 150-ஆவது ஆண்டு நிகழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்து கொள்கிறாா். இருநாட்டு உறவுகள் குறித்து அதிபா் சந்தோகியுடன் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

சுரிநாம் பயணத்தை நிறைவு செய்து, தனது வெளிநாட்டுப் பயணத்தின் இரண்டாவது கட்டமாக, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஐரோப்பிய நாடான சொ்பியாவுக்கு ஜூன் 7-ஆம் தேதி செல்லவுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT