உலகம்

சீனாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

5th Jun 2023 01:45 PM

ADVERTISEMENT


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலச்சரிவு லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான வன நிர்வாகப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலச்சரிவில் நேற்று 14 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். 

சம்பவ இடத்தில் மீட்பு உபகரணங்கள் பயன்படுத்தி மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

ADVERTISEMENT

வனப்­ப­கு­தி­களை அதி­க­மா­கக் கொண்ட சீச்­சு­வான் மாகாணத்தில் அடிக்­கடி இயற்­கைப் பேரி­டர்­கள் நிகழ்­ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT