சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
சிச்சுவான் மாகாணத்தின் லீசான் நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் இந்த மலைச்சரிவு ஏற்பட்டது. இதில் 14 போ் உயிரிழந்தனா். 5 பேரைக் காணவில்லை. தகவலறிந்து மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.