உலகம்

இந்தியாவுக்குத் துணை நிற்போம்: அதிபர் ஜோ பைடன் இரங்கல்

4th Jun 2023 08:19 AM

ADVERTISEMENT

 

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ரயில் விபத்து நேரிட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம். குடும்பம் மற்றும் கலாசார ரீதியாக இந்தியாவுடன் ஆழ்ந்த பிணைப்பை அமெரிக்கா கொண்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய மக்களுடன் அமெரிக்கா என்றும் துணை நிற்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது. 800க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT