உலகம்

சீனா சிச்சுவான் மாகாணத்தில் நிலச்சரிவு: 14 பேர் பலி, 5 பேர் மாயம்

4th Jun 2023 09:04 PM

ADVERTISEMENT

 

பெய்ஜிங்(சீனா): சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் ஞாயிற்றுக்கிழமை  திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியானதாகவும், 5 பேர் மாயமாகி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லெஷானில் உள்ள அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கிக்கொண்டனர். 

உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ஈடுபாடுகளில் சிக்கிய 14 பேர் சடலாகம மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் மயமாகி உள்ளனர். 

ADVERTISEMENT

தொடர்ந்து 14 சிறப்பு மீட்பு சாதனங்களுடன் 180 க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

குளோபல் டைம்ஸ் என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய செய்தித்தாளான பீப்பிள்ஸ் டெய்லியின் கீழ் வரும் தினசரி செய்தித்தாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT