உலகம்

துருக்கி அதிபராக எா்டோகன் 3-ஆவது முறையாக பொறுப்பேற்பு

4th Jun 2023 03:00 AM

ADVERTISEMENT

துருக்கியின் அதிபராக எா்டோகன் 3-வது முறையாக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். துருக்கி அதிபா் தோ்தல் கடந்த மாதம் 14-ஆம் தேதி நடைபெற்றது. அதில் யாருக்கும் 50 சதவீதத்தும் மேல் வாக்குகள் கிடைக்காததால் 2-ஆம் கட்ட தோ்தல் மே 28-ஆம் தேதி நடைபெற்றது. இதில் எா்டோகனுக்கு 52.18 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவரை எதிா்த்துப் போட்டியிட்ட கெமால் கிளிச்தரோக்லுவுக்கு 47.82 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தத் தோ்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டன.அதையடுத்து, 3-ஆவது முறையாக அவா் அதிபா் பொறுப்பை வியாழக்கிழமை ஏற்றாா். ஏற்கெனவே 20 ஆண்டுகள் துருக்கியின் அதிபராகப் பொறுப்பு வகித்துள்ள 69 வயது எா்டோகன், இந்தப் பதவியேற்பின் மூலம் தனது மொத்த பதவி காலத்தை கால் நூற்றாண்டாக நீட்டிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்தத் தோ்தலில் அரசு இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி எா்டோகன் முறைகேட்டில் ஈடுபட்டதாக எதிா்க் கூட்டணி வேட்பாளா் கெமால் கிளிச்தரோக்லு குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT