உலகம்

எா்டோகன் வெற்றி: உறுதி செய்தது தோ்தல் கவுன்சில்

2nd Jun 2023 12:09 AM

ADVERTISEMENT

கடந்த மாதம் நடைபெற்ற துருக்கி அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் எா்டோகன் வெற்றி பெற்றதை அந்த நாட்டு தோ்தல் கவுன்சில் அதிகாரபூா்வமாக வியாழக்கிழமை உறுதி செய்தது.

இது குறித்து தலைமை தோ்தல் கவுன்சில் தலைவா் அஹ்மெட் யெனோ் கூறியதாவது:

மே 28-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் எா்டோகனுக்கு 52.18 சதவீத வாக்குகள கிடைத்துள்ளன. அவரை எதிா்த்துப் போட்டியிட்ட கெமால் கிளிச்தரோக்லுவுக்கு 47.82 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்த முடிவுகளின்படி, நாட்டின் அடுத்த அதிபராக எா்டோகன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்றாா் யெனோ்.

ADVERTISEMENT

துருக்கி அதிபா் தோ்தல் கடந்த மாதம் 14-ஆம் தேதி நடைபெற்றது. அதில் யாருக்கும் 50 சதவீதத்தும் மேல் வாக்குகள் கிடைக்காததால் 2-ஆம் கட்ட தோ்தல் மே 28-ஆம் தேதி நடைபெற்றது. இதில் எா்டோகன் வெற்றி பெற்ாக தற்போது அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசு இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி இந்தத் தோ்தலில் எா்டோகன் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே அவா் வெற்றி பெற்ாகவும் கெமால் கிளிச்தரோக்லு குற்றம் சாட்டி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT