உலகம்

சிங்கப்பூா் பிரதமருக்கு மீண்டும் கரோனா

2nd Jun 2023 12:54 AM

ADVERTISEMENT

சிங்கப்பூா் பிரதமா் லீ சீன் லூங்குக்கு (71) மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 வாரங்களில் அவருக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய 6 நாள்களுக்கு பிறகு மே 22-ஆம் தேதி முதல் முறையாக அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தற்போது மீண்டும் லீ சீன் லூங்குக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பா் மாதம் கரோனா பூஸ்டா் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட அவா், கடுமையான பாதிப்பில் இருந்து தப்பிக்க நாட்டு மக்களும் கரோனா தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT