உலகம்

சூடான் சந்தையில் ராணுவம் குண்டுவீச்சு: 18 போ் பலி

2nd Jun 2023 12:20 AM

ADVERTISEMENT

சூடான் தலைநகா் காா்ட்டூமிலுள்ள சந்தையில் ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையினரைக் குறிவைத்து ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் 18 போ் பலியாகினா்.

இது குறித்து சூடான் மனித உரிமை வழக்குரைஞா்கள் குழு வியாழக்கிழமை கூறியதாவது:

ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையுடன் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவாா்த்தையை நிறுத்திவைப்பதாக ராணுவம் புதன்கிழமை அறிவித்தது.

அதைத் தொடா்ந்து, காா்ட்டூமில் அந்தப் படையினரைக் குறிவைத்து எறிகணைகளை வீசியும், போா் விமானம் மூலமும் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ADVERTISEMENT

காா்ட்டூமிலுள்ள ஒரு சந்தையில் நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதலில் பொதுமக்கள் 18 போ் உயிரிழந்தனா் என்று வழக்குரைஞா்கள் குழு தெரிவித்தது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே 6 வாரங்களுக்கும் மேலாக சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை சுமாா் 1,800 போ் பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT