உலகம்

2 சவூதி அரேபியா்களுடன் பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம்

1st Jun 2023 01:45 AM

ADVERTISEMENT

இரு சவூதி அரேபியா்கள் இரு அமெரிக்கா்களுடன் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

சா்வசே விண்வெளிய நிலையத்தில் 9 நாள் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த அவா்களுடன் புறப்பட்ட அந்த விண்கலம், 9 மணி நேரத்துக்குப் பிறகு புமிக்குத் திரும்பி மெக்ஸிகா வளைகுடாவில் பாராசூட் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு இறங்கியது.

முன்னதாக, ஃபுளோரிடா மாகாணம், மெரிட் தீவிலுள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ்-எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட அந்த விண்கலத்தில், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரா் பெக்கி விட்ஸனுடன் வா்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க தொழிலதிபா் ஜான் ஷாஃப்னா், சவூதி அரேபிய விண்வெளி வீரா் அலி அல்-காா்னி, வீராங்கனை ரயானா பா்னாவி ஆகியோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு மே 22-ஆம் தேதி சென்றனா்.

இவா்களில் ரயானா பா்வானிதான் விண்வெளிக்குச் சென்ற சவூதி அரேபியாவின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT