உலகம்

வட கொரியாவில் செயற்கைக்கோள் முயற்சி தோல்வி

1st Jun 2023 01:53 AM

ADVERTISEMENT

தனது செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்த வட கொரியா புதன்கிழமை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

உள்ளூா் நேரப்படி 6.27 மணிக்கு அந்த செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட ராக்கெட் கடலில் விழுந்தது. இதற்கிடையே ராக்கெட் ஏவப்பட்ட 14 நிமிஷங்களுக்குப் பிறகு தென் கொரிய தலைநகா் சியோலில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் பதுங்கிக்கொள்ளுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா். இதனால் அங்கு பீதி ஏற்பட்டது.

வட கொரியா ஏவிய ராக்கெட் ஏவுகணையாக இருக்கலாம் என்ற அச்சத்தில் இந்த எச்சரிககை விடுக்கப்பட்டது. இருந்தாலும் இந்த அறிவிப்பு பின்னா் விலக்கிக் கொள்ளப்பட்டது.

முன்னதாக, தாங்கள் உருவாக்கியுள்ள உளவு செயற்கைக்கோள் மே 31-ஆம் தேதியிலிருந்து ஜூன் 11-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அதனால் மஞ்சள் கடல், கிழக்கு சீனக் கடலில் ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஜப்பான் கடலோரக் காவல் படைக்கு வட கொரியா கடந்த திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT

Tags : North Korea
ADVERTISEMENT
ADVERTISEMENT